16.6 C
New York
Wednesday, September 10, 2025

ரயில் இயந்திரமும் பராமரிப்பு இயந்திரமும் மோதி விபத்து.

Heiligkreuz பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை, அதிகாலை 2 மணியளவில், தண்டவாள பராமரிப்புப் பணியின் போது ஒரு ரயில் இயந்திரமும், ரயில் அகழ்வு இயந்திரமும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்,  29 வயதுடைய ஒருவரும் 40 வயதுடைய ஒரு ரயில் ஊழியரும் படுகாயமடைந்தனர்.

சென் காலன் மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

60 வயதுடைய ஒரு ரயில் இயந்திர ஓட்டுநரும் பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மோதலுக்கான காரணம் குறித்து சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு சபை (SUST) விசாரித்து வருகிறது.

இதனால், St. Gallen –St. Margrethen பாதையில் St. Gallen St. Fiden மற்றும் Goldachஇடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த இடையூறு நேற்று நள்ளிரவு வரை நீடிக்கும் என்று அறவிக்கப்பட்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles