Appenzell Inner Rhodes கன்டோனில் உள்ள Gonten கிராமம், சுவிட்சர்லாந்தின் மின்னல் தலைநகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிக மின்னல் தாக்குதல்கள் இங்கு பதிவாகியுள்ளன.
Appenzell Inner Rhodes அதிக மின்னல் தாக்குதல்களைக் கொண்ட சுவிஸ் பிராந்தியம் என்று மின்னல் தகவல் சேவை மற்றும் சீமென்ஸ் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் Gonten இல் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2.75 மின்னல் தாக்குதல்கள் பதிவாகின.
சுவிட்சர்லாந்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மின்னல் தாக்குதல்களைக் கொண்ட பகுதி Valais கன்டோனில் உள்ள Conthey நகராட்சி ஆகும்.
இங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 0.16 மின்னல் தாக்குதல்கள் பதிவாகின.
மொத்தத்தில், சுவிட்சர்லாந்து முழுவதும் 29,000 மின்னல் தாக்குதல்கள் 2024 இல் பதிவாகியுள்ளன.
இது 2023 ஐ விட 12% குறைவு என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் மிகவும் பரபரப்பான மாதமாகும் இதில், 9,500, மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றள்ளன.
மின்னல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெற்ற பரபரப்பான நாள் ஜூலை 31 ஆகும். அன்று 3,200 மின்னல் தாக்குதல்கள் பதிவாகின.
மூலம்- swissinfo