Berikon இல் உள்ள Bernstrasse இல் Avia எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுத முனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சன்கிளாஸ், கம்பளி தொப்பி அணிந்து கத்தியுடன், நுழைந்த ஒருவர், அங்கிருந்தவரை அச்சுறுத்தி பணம் தருமாறு மிரட்டினார்.
பின்னர் அவர் கால்நடையாகத் தப்பிச் சென்றார்.
பொலிசார் தேடுதல் நடத்திய போது, ருடால்ப்ஸ்டெட்டன் ரயில் நிலையத்தில் சந்தேக நபரை அணுகிய போது, அவர் உடனடியாக பொலிசாரிடம் சரணடைந்தார்.
மேலதிக விசாரணைக்காக 33 வயதான சுவிஸ் நபரை பொலிசார் கைது செய்தனர்.
மூலம்- 20min.