Yevheniia Dymchenko என்ற 18 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி முதல் அவரைக் காணவில்லை என Appenzell Ausserrhoden கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
Herisau இல் உள்ள Cilanderstrasse பகுதியில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.
18 வயதான அவர் Herisauவில் வசிக்கிறார். ஜெர்மன் மற்றும் உக்ரேனிய மொழி பேசக் கூடியவர்.
மாற்றுத் திறனாளியான அவர்,மெதுவாகவே நடக்க கூடியவர் என்றும் தற்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.