21.6 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் மக்களைத் தவிக்க வைத்த மின்தடை.

சூரிச்சில் உள்ள Bellevue மற்றும் Stadelhofen  நிலையங்களில் ஏற்பட்ட மின் தடையால், நெரிசல் நேரத்தில்  பெரும் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மின் தடையால்  Stadelhofen இல் நெரிசல் நேர போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டது.

தெருவிளக்குகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் செயலிழந்தன. டிராம்கள் இயங்கவில்லை. பல பயணிகள் நிறுத்தங்களில் காத்திருந்தனர்.

Limmatquai இல் உள்ள ஒரு மின்மாற்றி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையே மின்தடைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7:20 மணிக்கு, பிரச்சினை அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட்டு வருவதாக EWZ அறிவித்தது.

மின் தடை சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

இரவு 8:10 மணிக்குப் பின்னர், மின்சாரம் விநியோகம் மீள வழங்கப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles