சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை அளவை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உயர்த்தியுள்ளது.
குறிப்பாக பெரிய நகரங்களில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Travel.state.gov இல் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கைகளைப் பெற பயணிகள் பெர்னில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இருப்பினும், சுவிட்சர்லாந்து எச்சரிக்கை நிலை 1 இல் மட்டுமே உள்ளது.
அவர்கள் “வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”.
இந்த எச்சரிக்கைகள் முதன்மையாக பெரிய நகரங்களில் சிறிய குற்றங்களுக்கு எதிராக விடுக்கப்படுகின்றன.குறிப்பாக திருட்டுக்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கிறது.
பயணிகளுக்கு அறிவுரை என்னவென்றால், விழிப்புடன் இருக்கவும், தனிப்பட்ட உடைமைகள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் என்பதாகும்.
இருப்பினும், பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறை தொடர்பாக- “குறைந்த முதல் நடுத்தர ஆபத்து” இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
இதன்படி, சுவிட்சர்லாந்து தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாகவும் திட்டமிடல் இடமாகவும் செயல்படுவதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக, ஜிஹாதிகள் குறித்து எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், சுவிட்சர்லாந்து இந்த வகை எச்சரிக்கையை பெறுவது இது முதல் முறை அல்ல.கடந்த காலங்களில் பல முறை எச்சரிக்கை நிலை 1 இல் வைக்கப்பட்டுள்ளது.
இப்போது நிலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min