டிசம்பர் 31 ஆம் திகதியுடன், கூடுதலாக ஆண்டுக்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளைத் திறக்க ஜெனீவா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிக்கலில் உள்ள உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கும் நோக்கில், வியாழக்கிழமை இதுதொடர்பான சட்டமூலம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 63 வாக்குகள் ஆதரவாகவும், 33 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய டிசெம்பர் 31ஆம் திகதியும் ஏனைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகளைத் திறக்க முடியும்.
எனினும் இந்த சட்டமூலம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு கோரப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo