சூரிச் கன்டோனல் பொலிசார் Schwerzenbachஇல் நடத்திய சோதனையின் போது 3,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளைக் கொண்ட சட்டவிரோத தோட்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாயன்று, பொலிசார், ஒரு உட்புற தோட்ட வசதியை ஆய்வு செய்த போது, சுமார் 3,000 கஞ்சா செடிகளையும், சுமார் பத்து கிலோ எடையுள்ள பயன்படுத்த தயாராக இருக்கும் கஞ்சாவையும் கண்டுபிடித்தனர்.
பல நூறு பிராங் பணத்தையும் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்தனர். செடிகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன
தோட்டத்தை இயக்கிய 33 வயது சுவிஸ் நபர் மற்றும் 28 வயது பிரெஞ்சுக்காரர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் இப்போது போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
மூலம்- 20min