6.8 C
New York
Monday, December 29, 2025

சுவிஸ் கன்டோன் பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை?

சுவிஸ் கன்டோனல் கல்வி ஆணையத்தின் புதிய தலைவர், பாடங்களில் பயன்படுத்துவதைத் தவிர, பாடசாலைகளில் மொபைல் போன்களை தடை செய்ய விரும்புகிறார்.

“மாணவர்கள் பாடசாலைக்குள் நுழைந்தவுடன் தங்கள் மொபைல் போன்களை ஒதுக்கி வைக்க வேண்டும்,” என்று கன்டோனல் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின்  (EDK) தலைவர் கிறிஸ்டோஃப் டார்பெல்லே, கூறினார்.

அன்றாட வாழ்க்கையிலும் பாடசாலையிலும் மொபைல் போன்கள் மிக அதிகமாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

முன்னாள் EDK தலைவர் சில்வியா ஸ்டெய்னர், வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் மொபைல் போன்களைத் தடை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அண்மையில் சுர் நகராட்சி இந்த தடையை பரிசீலிப்பதாக அறிவித்தது.

மார்ச் மாதத்தில் லூசெர்ன் மாகாண கவுன்சில் இதற்கு எதிராக கருத்து வெளியிட்டது.

டிஜிட்டல் மீடியாவை எவ்வாறு கையாள்வது என்பதை குழந்தைகளும் இளைஞர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காரணம் என்று கூறப்பட்டது.

மேலும், பொறுப்பு தனிப்பட்ட பாடசாலைகளிடமே உள்ளது என்று சுவிஸ் மாகாண கவுன்சிலும்  வாதிட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles