4.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச் ஹோட்டல் தீவிபத்தில் 7 பேர் காயம்.

சூரிச்சின் மாவட்டம் 5 இல் உள்ள Ibis ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் மற்றும்  பொலிசார் உதவிக்கு விரைந்து சென்றனர்.

தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் கடுமையான புகை வெளியேறி வருகிறது.

புகையினால் பாதிக்கப்பட்ட பலர் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 7 பேரில் ஒருவர் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

புகையை சுவாசித்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles