வாடகை வாகனத்தில் பயணிக்கும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 44 வயதுடைய இத்தாலிய நபர் மீது சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரதிவாதி தனது வாகனத்தில் பயணம் செய்த பெண்களை பலமுறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றங்கள் கடந்த ஆண்டு நடந்துள்ளன. அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சூரிச் நகரில் இரவு நேரத்தில் அந்த நபர் தனது தனிப்பட்ட வாகனத்தில் ஊபர் அல்லது போல்ட் ஓட்டுநராகப் பணியாற்றிய போது, இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில், பெண்கள் வெளியேறுவதைத் தடுக்க அவர் வாகனத்தை உள்ளே வைத்துப் பூட்டியுள்ளார்.
மேலும் தனது மொபைல் போனைப் பயன்படுத்தி தூங்கும் அல்லது மயக்கமடைந்த பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுத்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூலம்- 20min.