ஜெர்மனியின் ஹம்பேர்க் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்றுமாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜெர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
39 வயதுடைய பெண் ஒருவரே கண்ணில் எதிர்ப்பட்டவர்களை கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரில், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 39 வயதுடைய ஜெர்மன் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் தனியாகவே செயற்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.