Kandersteg இல் உள்ள Morgenhorn இல் சனிக்கிழமை பிற்பகல், மதியம் 1:45 மணிக்கு இடம்பெற்ற பனிச்சரியில், மூன்று பேர் சிக்கிக்கொண்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று பேர் கொண்ட குழுவும் ஒரு தனி நபரும் மோர்கன்ஹார்னின் உச்சிக்கு பனிச்சரிவு சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது, பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிச்சரிவில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவசர சேவைகள் உடனடியாக அனுப்பப்பட்டு , பகுதியளவு புதைக்கப்பட்ட மூவரும் மீட்கப்பட்டனர்.
இருப்பினும் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு ஆண்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்தவர் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் 29 வயது சுவிஸ் குடிமகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.