17.5 C
New York
Wednesday, September 10, 2025

மீட்கப்பட்ட சடலம், குவிக்கப்பட்ட பொலிஸ்- லூசெர்னில் நடந்தது என்ன?

லூசெர்னில் உள்ள வோல்ஹுசனில் நேற்றுமாலை  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு பொலிஸ் வாகனங்கள், ஒரு அம்புலன்ஸ் மற்றும் லூசெர்ன் கன்டோனல் மருத்துவமனை  வாகனம் என்பன சம்பவ இடத்தில் காணப்பட்டன.

லூசெர்ன் பொலிசார், ஒரு சடலம்  கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

இது ஒரு கொலையா என்பதைத் தீர்மானிக்க இன்னும் விசாரணை நடந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் பாலினம் குறித்தும் பொலிசார் இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அதேவேளை, வோல்ஹுசனில் இருந்து லூசெர்னுக்கு ரயிலில் சென்ற சிலரையும் பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். மேலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles