Zermatt இல் உள்ள Rimpfischhorn இல் மலையேற்ற வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை, மாலை 4:30 மணியளவில், இரண்டு பனிமலையேற்ற சுற்றுலாப் பயணிகள் சிகரத்தின் அடிவாரத்தில் இவர்களின் சடலங்களைக் கண்டு தகவல் கொடுத்தனர்.
அதையடுத்து, ஒரு துணை மருத்துவர், ஒரு அவசர மருத்துவர் மற்றும் இரண்டு மீட்பு நிபுணர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் உயிரிழந்த 5 மலையேற்ற வீரர்களின் சடலங்களை கண்டுபிடித்து மீட்டது.
அனைத்து உடல்களும் மலையிலிருந்து மீட்கப்பட்டதாக Valais கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததால், என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் முழுமையடையவில்லை.
விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min.