2024 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் நான்கு குழந்தைகள் துஷ்பிரயோகத்தின் விளைவாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 19 சுவிஸ் குழந்தைகள் மருத்துவமனைகளில், 2,084 குழந்தைகளுக்கு, சந்தேகத்திற்குரிய துஷ்பிரயோகம் தொடர்பாக சிகிச்சை அளித்திருந்தன.
பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் உச்சத்தைப் போலவே உள்ளது என்று சுவிஸ் குழந்தைகள் மருத்துவமனைகளின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு புள்ளிவிபரங்களின் 16வது அறிக்கையின்படி, மொத்தம் 705 உடல் ரீதியான துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 153 வழக்குகள் அதிகம்.
இதற்கு நேர்மாறாக, 2024 இல் உளவியல் ரீதியான துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 437 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
வாழ்க்கையின் முதல் ஆண்டில் மூன்று குழந்தைகள் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் விளைவாக இறந்தனர்.
கடுமையான புறக்கணிப்பின் விளைவாக மற்றொரு குழந்தை வாழ்க்கையின் இரண்டாவது ஆண்டில் இறந்தது.
மூலம்- swissinfo