16 C
New York
Tuesday, September 9, 2025

பேருந்துடன் மோதிய விநியோக வாகனம்- 7 பேர் காயம்.

Zug நகரில்  பேருந்து ஒன்றுடன் விநியோக வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Aegeristrasse இல் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் விநியோக வாகன சாரதி படுகாயம் அடைந்தார்.

அவர் வாகனத்திற்குள் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரால் பலத்த சிரமங்களுக்குப் பின் மீட்கப்பட்டார்.

அதேவேளை பொதுப் போக்குவரத்து பேருந்தில் இருந்த மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles