Valais கன்டோனில் உள்ள, Blatten இல் நேற்று மாலையில், ஒரு பாரிய பனிப்பாறை சரிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பாறை, பாறை, பனி மற்றும் நீர் ஆகியன, சரிந்து அணையில் விழுந்துள்ளது. எனினும் சிதைவுகள் பிளாட்டன் கிராமத்தை அடையவில்லை.
பனிப்பாறை ஒரு நாளைக்கு சுமார் 10 மீட்டர் நகர்ந்து வருகிறது என்று நேற்று முன்தினம் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிளாட்டன் கிராமத்தை விட்டு மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிய பின்னர் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பனிப்பாறை சரிவு இதுவாகும்.
பல ஆயிரம் கன மீட்டர் சிதைவுகள் சரிந்து விழுந்த போது, ஏராளமான மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
லோன்சா நதியிலிருந்து சுமார் 400 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைப் படிவு நின்றுவிட்டது.
பனிப்பாறை சரிவு ஏற்படலாம் என்பதால், Blatten கிராமத்தை விட்டு 300 பேர் கடந்த 14ஆம் திகதி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மூலம்- 20min.