பெர்னில், Oberdiessbach இற்கு அருகேயுள்ள, Aeschlen இன் Lindenstrasse இல் கிரேனில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பணியிடம் ஒன்றில் உயரமான இடத்தில் கிரேனின் உதவியுடன் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் தவறி விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய சுவிஸ் பிரஜை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin