16 C
New York
Tuesday, September 9, 2025

சுவிஸ், ஜெர்மன், இத்தாலிய நபர்களின் கார்கள் மோதியதன் விளைவு.

ஸ்ப்ளூஜென் அருகே A13 இல் ஞாயிற்றுக்கிழமை மதியம்,  மூன்று கார்கள் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.

பிற்பகல் 2:20 மணியளவில், 61 வயதான ஜெர்மன் ஒருவர் A13 இல் வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

58 வயதான சுவிஸ் நபரும் 32 வயதான இத்தாலிய நபரும் தெற்கு நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர்.

எர்லா நகருக்கு அருகில், ஜெர்மானியரின் கார் சுவிஸ் நபருடைய கார் மீது நேருக்கு நேர் மோதியது.

ஜெர்மானியரின் கார் இரண்டு பாதைகளிலும் வீசப்பட்டு, பின்னர் இத்தாலியரின் கார் மீது மோதியது.

ஜெர்மானியருக்கும் இத்தாலியருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் லுகானோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுவிஸ் சாரதி மற்றும்  பயணிகள் மூவரும்  காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles