சோலோதர்னில் உள்ள விளக்கமறியல் சிறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை, தப்பிச் சென்ற நான்கு பேரால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதிகள் தங்கள் அறைகளுக்கு வெளியே உள்ள பொதுவான பகுதிகளில் தங்கியிருந்தபோது நான்கு பேரும் தப்பிச் சென்றனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் இதுவரை பலனளிக்கவில்லை.
அவர்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று, சோலோதர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற நான்கு பேரும் நடந்து வரும் குற்றவியல் நடவடிக்கைகளில் முன்கூட்டியே தண்டனை அனுபவித்து வந்தனர்.
அவர்கள் மீது கொள்ளை போன்ற சொத்து குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் ஏற்கனவே பல வாரங்கள் அல்லது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கைதிகள் பாதுகாப்பு வேலியை வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
மூலம்- 20min.