-0.1 C
New York
Sunday, December 28, 2025

2030இற்குள் ஆண்டு சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை  புதிய  சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக, ஜெனீவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில்,  2024 ஆம் ஆண்டு இதுவரை அளவிடப்பட்ட அதிகபட்ச சராசரி வெப்பநிலையைக் கொண்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.

2025 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில், இந்தச் சாதனை முறியடிக்கப்படுவதற்கு 80% வாய்ப்பு இருப்பதாக WMO கணித்துள்ளது.

அந்தக் கணிப்பின்படி, 2029 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதல் ஐந்து ஆண்டு சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.

இது 15 நிறுவனங்களின் காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் வானிலை அலுவலகத்தின் தலைமையில் தொகுக்கப்பட்டது.

மூலம்- swissinfo.

Related Articles

Latest Articles