21.8 C
New York
Monday, September 8, 2025

நாடு கடத்தப்படவிருந்த இளைஞன் சூரிச் தடுப்பு மையத்தில் சடலமாக மீட்பு.

நாடுகடத்துவதற்கான சூரிச் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், சூரிச் விமான நிலையத்தில் உள்ள நிர்வாக தடுப்பு மையத்தில் (ZAA) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை மாலை, 22 வயதுடைய மொராக்கோ இளைஞன் அவரது அறையில் அசைவின்றிக் காணப்பட்டார்.

உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

22 வயது இளைஞன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்.

அந்த நபர் நாடு கடத்தப்படுவதற்கான தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கன்டோனல் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணைகளில், மூன்றாம் தரப்பினரின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles