Aargau கன்டோனில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஓகஸ்ட் மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, இந்த தடை அமுலுக்கு வரும்.
வகுப்பறைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படும்.
வகுப்பு நேரங்கள், ஓய்வு நேரங்களில் மாத்திரமன்றி பாடசாலை சுற்றுலாக்களின் போதும் இந்த தடை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.
Nidwalden கன்டோன் இந்த மாத இறுதியில் இருந்து பாடசாலைகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கான தடையை நடைமுறைக்கு கொண்டு வருகின்றது.
மூலம்- 20min.