18.8 C
New York
Wednesday, September 10, 2025

பேருந்து ஓட்டுநரின் முகத்தில் குத்திய போதை ஆசாமி.

யூரியின் குர்ட்னெல்லனில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த ஒருவர் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார்.

பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த 39 வயதான சுவிஸ் நபர்  அவரை வார்த்தைகளால் திட்டியதுடன் முகத்தில் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் இரவு 11 மணியளவில் பொதுப் போக்குவரத்தில் இடம்பெற்றது.

பேருந்து ஓட்டுநர் விரைவாகச் செயற்பட்டு ஃபெலிட்டல் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தினார். அங்கு, குடிபோதையில் இருந்த பயணியை பேருந்திலிருந்து அகற்றினார்.

தனது சொந்தப் பாதுகாப்பிற்காக, அந்த நபரின் கைகளைக் கட்டி,  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

மூச்சுப் பரிசோதனையில் அவர் குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles