20.4 C
New York
Wednesday, September 2, 2026

பனிச்சரிவினால் மூடப்பட்ட வீதி- போக்குவரத்து துண்டிப்பு.

வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோபன்ஸ்டீனுக்கு அருகிலுள்ள ஒரு வீதி பனிச்சரிவில் புதைந்து போனதால், லோட்சென்டல் பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ரோட்லோய்வி கலரியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு தகவல்கள் கிடைத்ததாக வலாய்ஸ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதனால், பி.எல்.எஸ் லாட்ச்பெர்க் ரயில் சேவை, கார் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.பள்ளத்தாக்கு சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாராவது காயமடைந்தார்களா அல்லது வேறு ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்று பொலிசாரால் இன்னும் உறுதியாக கூற முடியவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles