சூரிச் கன்டோனில் உள்ள ஃபுங்கனில் உள்ள ஒரு துப்பாக்கி கடையில் மே மாத இறுதியில், பெருமளவு துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உட்பட சுமார் 50 கைத்துப்பாக்கிகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் கடையின் நுழைவாயில் வழியாக கடைக்குள் நுழைந்துள்ளனர்.
“நேச்சுர்ஆக்டிவ்” என்ற அந்த துப்பாக்கிக் கடை, துப்பாக்கி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானது.
துப்பாக்கிச் கடைகளில் எச்சரிக்கை அமைப்புகள், வீடியோ கண்காணிப்பு அல்லது பாதுகாப்பு கண்ணாடி ஜன்னல்கள் போன்ற பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன.
இருந்த போதும் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சூரிச் கன்டோனல் பொலிசார், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெட்போலும் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த திருட்டுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மூலம்- 20min.