பெல்லெரிவெஸ்ட்ராஸில் விநியோக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 ஆண்களுடன் சென்ற விநியோக வாகனம் ஒன்று, டைஃபென்ப்ரூனென் ரயில் நிலையத்திலிருந்து பெல்லெரிவெஸ்ட்ராஸில் உள்ள நகர மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதியுள்ளது.
ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, வாகனத்தில் இருந்த ஏனைய நான்கு பேரும் காயம் அடைந்துள்ளனர்.
ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- 20min.