இந்த ஆண்டு சூரிச் நகர ஏரியை நீந்திக் கடக்கும் போட்டி ஜூலை 2 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வானிலை சிறப்பாக இல்லாவிட்டால் அல்லது தண்ணீர் மிகவும் குளிராக இருந்தால், இரண்டு மாற்று திகதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜூலை 2ஆம் திகதி நடத்த முடியாமல் போனால், 1,500 மீட்டர் நீச்சல் போட்டியை, ஜூலை 9 அல்லது ஓகஸ்ட் 20 அன்று நடத்தலாம் என்று ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
போட்டியை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு நிகழ்வுக்கு முந்தைய திங்கட்கிழமை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு 8,500 க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் ஏரி கடக்கும் போட்டியில் பங்கேற்றனர்.
நல்ல வானிலை மற்றும் 21°C க்கும் அதிகமான நீர் வெப்பநிலை ஆகிய இந்த போட்டியை நடத்துவதற்கு தேவையான நிபந்தனையாகும்.
மூலம்- swissinfo