19.5 C
New York
Tuesday, September 9, 2025

23,000 துப்பாக்கி ரவைகள் திருட்டு.

Châtillon துப்பாக்கி சுடும் தளத்திலிருந்து 23,000 துப்பாக்கி ரவைகள் கடந்த மாத நடுப்பகுதியில் திருடப்பட்டுள்ளன. ஜூரா பொலிசார் தற்போது அவற்றை மீட்டுள்ளனர்.

துப்பாக்கி சுடும் தளத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர்களாவர்.

இரண்டு இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிசார் அறிவித்தனர்.

இந்த திருட்டுக்கான சரியான நோக்கம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களுக்கு  ஹாட்-சோர்ன் பகுதியில் நடந்த பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles