23 C
New York
Monday, September 8, 2025

ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது இஸ்ரேல்.

ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருப்பதாக, அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அறிவித்துள்ளது என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெனிபர் ஜேக்கப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து, அமெரிக்கா ஊழியர்களை திரும்பப் பெறுவதற்கு இதுவே காரணம் என்று ஜெனிபர் ஜேக்கப்ஸ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிலுக்கு ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு இஸ்ரேலின் அணுசக்தி மையங்களை தாக்கப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles