22.8 C
New York
Tuesday, September 9, 2025

இலட்சக்கணக்கில் வீதியில் திரண்ட பெண்கள்.

சுவிட்சர்லாந்தில் நேற்று ஏழாவது ஆண்டாக பெண்கள் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜெனிவா, சூரிச், பாசல், உள்ளிட்ட 25 நகரங்களில் இடம்பெற்ற பேரணிகளில் இலட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

சம ஊதியம், பாலியல் துன்புறுத்தலை சகித்துக் கொள்வதில்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கூடாது, சிறந்த குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

சூரிச்சில் இடம்பெற்ற பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர்.

சூரிச் பேரணியின் போது சுதந்திர பலஸ்தீன கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles