3.2 C
New York
Sunday, March 29, 2026

பிரான்ஸ் விபத்தில் ஜெனிவா சைக்கிளோட்டிகள் மூவர் பலி.

பிரான்சில் ஜெனிவாவைச் சேர்ந்த 4 சைக்கிளோட்டிகள் மீது வான் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பெல்வில்லே-சுர்-லோயர் இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 67 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

69 வயதுடைய மற்றொருவர், மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மூன்றாவது சைக்கிள் ஓட்டுநர் டூர்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று,  உயிரிழந்துள்ளார்.

வானை ஒட்டிச் சென்ற 87 வயது ஓட்டுநர் பொலிசாரால் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் ஒரு மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆரம்ப சோதனைகளில் அவரது இரத்தத்தில் போதைப்பொருள் அல்லது அல்கஹோல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles