18.8 C
New York
Wednesday, September 10, 2025

காலநிலை மாற்றத்தின் விளைவு- கோடை மழை தீவிரமாக இருக்கும்.

எதிர்காலத்தில் அல்ப்ஸ் மலைகளில் கோடை மழைப்பொழிவு அதிகமாகவும், தீவிரமாகவும் இருக்கும் என, சுவிஸ்-இத்தாலிய ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், அல்ப்ஸில் குறுகிய, கனமழை இரட்டிப் பாகும் என்றும் அந்த ஆராய்ச்சி குழு எதிர்பார்க்கிறது.

சராசரியாக 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பெய்யும் இடியுடன் கூடிய கன மழை, ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஏற்படும் என்று npj காலநிலை மற்றும் வளிமண்டல அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு காட்டுகிறது.

லொசேன் பல்கலைக்கழகம் (யுனில்) மற்றும் படுவா பல்கலைக்கழகம் (இத்தாலி) ஆராய்ச்சியாளர்கள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 300 மலை வானிலை நிலையங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.

சராசரியாக ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வு கூட சிக்கலாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூடான காற்று அதிக ஈரப்பதத்தை சேமித்து, இதனால் இடியுடன் கூடிய மழையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

உலக சராசரியை விட அல்பைன் பகுதி வேகமாக வெப்பமடைந்து வருவதால், அது குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles