20.1 C
New York
Wednesday, September 10, 2025

ஈரானில் சுவிஸ் தூதரகம் மூடப்பட்டது – வெளியேறினார் தூதுவர்.

ஈரானுக்கான சுவிஸ் தூதுவர்  வியாழக்கிழமை இரவு தெஹ்ரானில் இருந்து வெளியேறியுள்ளார்

சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் இதனை அறிவித்துள்ளார்.

தெஹ்ரான் தூதரகத்தில் எஞ்சியிருந்த ஏழு உறுப்பினர்களுடன் தூதுவர் நேற்று காலையில் அசர்பைஜானுக்கு சென்று சேர்ந்துள்ளார்.

தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு எடுத்த முடிவைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஐந்து தூதரக பணியாளர்கள்  தங்கள் குடும்பத்தினருடன் நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

பாதுகாக்கப்பட வேண்டிய  உபகரணங்களும் வெளியேற்றப்பட்டன என்றும் காசிஸ் கூறினார்.

கட்டடங்கள் மூடப்பட்டு விட்டன, மேலும் ஒரு பராமரிப்பாளரைத் தவிர உள்ளூர் ஊழியர்கள் தளத்தில் இல்லை என்று காசிஸ் மேலும் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles