சமையல் பயிற்சியாளரான 14 வயதுச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த உயர்தர உணவகம் ஒன்றின் தலைமை சமையற்காரர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார்.
2020ஆம் ஆண்டி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு Frauenfeld மாவட்ட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தலைமை சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும், 10 ஆண்டுகள் நாடுகடத்தல் உத்தரவும் பிறப்பிக்கக் கோரி அரச தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமி மீதான தாக்குதலுக்காக 12 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதித்த அதேவேளை நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
மூலம்- 20min.

