கிராபுண்டன் கன்டோனில் பண்ணை ஒன்றில் காளை மாடு தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
61 வயதான அந்த நபர் திறந்தவெளி கொட்டகையில், காளைகள் ஓய்வெடுக்கும் பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த போது, சுமார் 1,000 கிலோகிராம் எடையுள்ள ஒரு காளை விவசாயியை தாக்கியுள்ளது.
ஊழியர் ஒருவர் உடனடியாக பலத்த காயமடைந்த நபரைக் காப்பாற்றி, முதலுதவி அளித்து கிராபுண்டன் கன்டோனல் பொலிஸ் மூலம் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, காயமடைந்த நபர் சுரில் உள்ள கிராபுண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- 20min.

