20.1 C
New York
Wednesday, September 10, 2025

A1 வீதியில் விபத்தை அடுத்து பற்றியெரிந்த கார்கள்.

சூரிச் நோக்கிச் செல்லும் A1 வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தை அடுத்து கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

போக்குவரத்து நெரிசலின் போது கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதன்போது, மோதிய கார்களில் ஒன்று திடீரென தீப்பிடித்தது.

வாகனங்கள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்ததால், தீ வேறு 3 கார்களுக்கும் பரவியது.

கடுமையான புகை காரணமாக, நெடுஞ்சாலை இரு திசைகளிலும் முழுமையாக மூடப்பட்டதாக ஆர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கார்களில் பயணித்த நான்கு பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரவு 9 மணிக்கு பின்னரே காவல்துறையினரால் முதல் பாதையை மீண்டும் திறக்க முடிந்தது.

இருப்பினும், விரிவான சுத்தம் செய்யும் பணிகள் காரணமாக இரு திசைகளிலும் வீதி அதிகாலை 1 மணியளவிலேயே முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles