17.4 C
New York
Saturday, October 10, 2026

செக் அணியை வீழ்த்திய சுவிஸ் பெண்கள் அணி.

ஐரோப்பியன் சம்பியன் கிண்ணத்துக்கான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட சினேகபூர்வ போட்டியில் செக் குடியரசு அணியை சுவிஸ் அணி தோற்கடித்துள்ளது.

நேற்று நடந்த கடைசி சிநேகபூர்வ போட்டியில் சுவிஸ்  மற்றும் செக் அணிகள் மோதின.

- Advertisement -

இதில் சுவிஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செக் அணியை வெற்றி கொண்டுள்ளது.

அதேவேளை வரும் புதன்கிழமை ஐரோப்பியன் சம்பியன் கிண்ணத்துக்கான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் முதல்  போட்டியில் நோர்வே அணியுடன் சுவிஸ் அணி விளையாடும்.

ஜூலை 2ஆம் திகதி தொடக்கம், 27ஆம் திகதி வரை, சுவிசின் Basel, Bern, Thun, Sion, Geneva, Lucerne, Zurich, and St. Gallen ஆகிய 8 நகரங்களில் 31 போட்டிகள் நடக்கவுள்ளன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles