ஐரோப்பியன் சம்பியன் கிண்ணத்துக்கான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட சினேகபூர்வ போட்டியில் செக் குடியரசு அணியை சுவிஸ் அணி தோற்கடித்துள்ளது.
நேற்று நடந்த கடைசி சிநேகபூர்வ போட்டியில் சுவிஸ் மற்றும் செக் அணிகள் மோதின.
இதில் சுவிஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செக் அணியை வெற்றி கொண்டுள்ளது.
அதேவேளை வரும் புதன்கிழமை ஐரோப்பியன் சம்பியன் கிண்ணத்துக்கான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நோர்வே அணியுடன் சுவிஸ் அணி விளையாடும்.
ஜூலை 2ஆம் திகதி தொடக்கம், 27ஆம் திகதி வரை, சுவிசின் Basel, Bern, Thun, Sion, Geneva, Lucerne, Zurich, and St. Gallen ஆகிய 8 நகரங்களில் 31 போட்டிகள் நடக்கவுள்ளன.
மூலம்- 20min.