20.4 C
New York
Saturday, October 10, 2026

டெல்லிக்குப் புறப்பட்ட விமானம் சூரிச்சை வட்டமடித்து விட்டு திரும்பியது.

சூரிச் விமான நிலையத்திலிருந்து நேற்றுப் பிற்பகல் டெல்லிக்குப் புறப்பட்ட சுவிஸ் விமானம் LX146 தொழில்நுட்பக் கோளாறினால் பல மணித்தியாலங்களாக வட்டமடித்த பின்னர் மீண்டும் சூரிச்சில் தரையிறங்கியுள்ளது.

குறித்த ஏர்பஸ் A330 விமானம், முதலில் ஒஸ்ரியா வழியாகவும், பின்னர் வடமேற்கு சுவிட்சர்லாந்து வழியாகவும் நீண்ட நேரம் வட்டமடித்துள்ளது.

- Advertisement -

விமானம் முதலில் இரவு 11:30 மணிக்கு டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்ட போதும்.  விமானத்தில் உள்ள சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானத்தை நிறுத்த குழுவினர் முடிவு செய்ததாக சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த விமானம் மாலை 4 மணிக்குப் பிறகு சூரிச்சில் தரையிறக்கப்பட்டது.

மாற்று விமானம் மாலை 6 மணிக்கு டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

A330 விமானத்தில் நிறைய எரிபொருள் இருந்ததால், எரிபொருளை எரிக்கவும், தரையிறங்கும் எடையைக் குறைக்கவும் குழுவினர்  விமானங்களை வானில் பறக்கச் செய்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles