சுவிட்சர்லாந்து நடத்தும் மகளிர் யூரோ கால்பந்து போட்டியின் முதல் போட்டி புதன்கிழமை மாலை சென் காலனில் உள்ள மைதானத்தில் நடந்த போது, ட்ரோனைப் பறக்க விட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 வயதான அவர், கால்பந்து போட்டி நாட்களில் ட்ரோன்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை மீறினார்.
அவர் மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென் காலன் கன்டோனல் அரசு, போட்டி நாட்களில் கைபன்பார்க்கைச் சுற்றி முழுமையான விமானத் தடையை பிறப்பித்துள்ளதாக சென் காலன் நகர காவல்துறை சனிக்கிழமை அறிவித்தது.
இதனால் காவல்துறை வான்வெளியைக் கண்காணித்தது.
புதன்கிழமை இரவு 9:15 மணிக்கு, காவல்துறை உறுப்பினர்கள் ட்ரோனைக் கவனித்தனர்.
பின்னர் ஒரு ரோந்துப் படை ட்ரோன் விமானியை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றது.
மூலம்- swissinfo

