ஈரானில் போர்ச் சூழ்நிலை காரணமாக ஜூன் 20 ஆம் திகதி மூடப்பட்ட சுவிஸ் தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தூதரகம் படிப்படியாக அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதுவர் நாடின் ஒலிவியேரி லோசானோ ஒரு சிறிய குழுவுடன், நேற்று அசர்பைஜான் வழியாக தெஹ்ரானுக்குத் திரும்பியதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
தீவிரமான ஆபத்து பகுப்பாய்வு மற்றும் ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னரே, தூதரகத்தை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை தெஹ்ரானில் உள்ள தூதரகத்தின் நடவடிக்கைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது.
இருப்பினும், விசா வழங்குதல் உள்ளிட்ட தூதரக சேவைகள் இப்போது வழங்கப்படாது.
தெஹ்ரானில் சுவிஸ் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், சுவிட்சர்லாந்து மீண்டும் ஈரானில் அமெரிக்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.
மூலம்- swissinfo

