23.3 C
New York
Wednesday, July 9, 2025

இயந்திரங்களில் பெறும் கோப்பியில் பக்டீரியாக்கள்.

கோப்பி இயந்திரங்களிலிருந்து பெறப்படும் பால் பானங்களின் நான்கில் ஒரு மாதிரிகளில், அதிகப்படியான குடல் பக்டீரியாக்கள் காணப்பட்டதாக, கடந்த ஆண்டு, சூரிச் கன்டோனல் ஆய்வகம் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் மட்டுமல்ல, உணவகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலும், முழு தானியங்கி கோப்பி இயந்திரங்களிலிருந்து பெறப்படும் கப்புசினோ மற்றும் பிற பால் பானங்கள் பிரபலமாக உள்ளன.

இருப்பினும், இயந்திரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால், அவை சுகாதாரமற்றதாக மாறக்கூடும் என்று  சூரிச் கன்டோன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சூரிச்சில் உள்ள கன்டோனல் ஆய்வகத்தில் கோப்பி இயந்திரங்களிலிருந்து 15 மாதிரிகள் பல்வேறு கிருமிகளுக்காக பகுப்பாய்வு செய்யப்பட்டன.

நான்கு மாதிரிகளில் என்டோரோ பக்டீரியாவிற்கான வழிகாட்டுதல் மதிப்புகள் அதிகமாக இருந்தன.

இந்த பக்டீரியாக்கள் சுற்றுச்சூழலிலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலிலும் காணப்படுகின்றன. அவற்றில் சில வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஏரோபிக், மீசோபிலிக் பக்டீரியாக்கள் வழிகாட்டுதல் மதிப்பை விட அதிகமாக அளவிடப்பட்டன. இந்த கிருமிகளின் குழுவில் ஏராளமான வகையான பக்டீரியாக்கள் அடங்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles