இத்தாலியின் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் இயந்திரத்துக்குள் பணியாளர் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதனால், அனைத்து விமான சேவைகளும் இன்று காலை நிறுத்தப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இயந்திரத்திற்கு உள் இழுக்கப்பட்டு, உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது. அந்த நபர் விமான நிலையத்திற்குள் நுழைந்து விமானத்தை நோக்கி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஸ்டூரியாஸுக்குச் செல்லும் குறைந்த விலை விமான நிறுவனமான வோலோடியாவைச் சேர்ந்த ஏர்பஸ் A319 விமானத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் இடைநிறுத்தப்பட்ட விமான நிலைய செயற்பாடுகள், மதியம் 12:00 மணிக்குப் பின்னர், மீண்டும் தொடங்கின.
மூலம்- swissinfo