19.7 C
New York
Sunday, September 7, 2025

சுவிசில் முன்னாள் கணவனை தீர்த்துக் கட்ட உத்தரவிட்ட கனடிய பெண் கைது.

சுவிட்சர்லாந்தில் தனது முன்னாள் கணவனை கொலை செய்ய உத்தரவிட்ட பெண் ஒருவர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான அந்தப் பெண் கொலை முயற்சிக்காக சுவிஸ் அதிகாரிகளால் தேடப்படுபவர் என ஜெர்மன் மத்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடியப் பெண்ணான அவர், தனது முன்னாள் கணவனைக் கொல்ல மூன்று பேருக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் 2018 ஆம் ஆண்டு, தாக்குதலில் இருந்து தப்பிய போதும், பலத்த காயமடைந்தார்.

ரொறன்ரோவில் இருந்து வந்தவுடன் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அந்தப் பெண், தற்போது காவலில் உள்ளார்.

அவரை நாடு கடத்த சுவிஸ் அதிகாரிகள் விண்ணப்பிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles