கிழக்கு சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் பொலிசார், ஒரு வாரத்திற்குள் சுரில் ஐந்து கோகைன் வியாபாரிகளை கைது செய்துள்ளனர்.
வீடு, கார் சோதனைகளின் போது கிட்டத்தட்ட கால் கிலோகிராம் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
ஐந்து இளைஞர்களும், இரண்டு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகவும், ஒருவர் தனியாகவும் செயல்பட்டுள்ளனர்.
ஒரு குழுவில் 20 வயது செர்பியர் மற்றும் 24 வயது கொசோவர், மற்றொரு குழுவில் 25 வயது போர்த்துகீசியர் மற்றும் 22 வயது பிரேசிலியர் இடம்பெற்றிருந்தனர்.
33 வயது கொசோவர் ஒருவர் தனியாக போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தார்.
இவர்கள் கிராபுண்டன் அல்லது சென் காலன் கன்டோன்களில் வசிக்கின்றனர்.
மூலம்- swissinfo