சூரிச்சில் ஐரோப்பிய கிண்ண ரசிகர் வலையத்தில், உணவு லொறி ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சூரிச் மத்திய நிலையத்திற்கு மேலே புகை மூட்டம் காணப்படுகிறது.
யூரோபாலியிலுள்ள ரசிகர்கள் வலயப் பகுதியில் இன்று மதியம் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பற்றி எரியும் உணவு லொறியில், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால், ஆபத்தான நிலை உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.