புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 11 ஆம் திகதி ஹீர்ப்ரக் ரயில் நிலையத்தில் அல்ஜீரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 34 வயது குரோஷிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் நடந்தபோது அவர் அணிந்திருந்த மஞ்சள் ஜக்கெட் தேடப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தக் கைது இடம்பெற்றதாக சென் காலன் கன்டோனல் காவல்துறை அறிவித்துள்ளது.
வீடியோ காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், அவரை க மூன்று மாதங்கள் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்- swissinfo