பேடன் ( Baden) இல் கைதி ஒருவர், வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர் தப்பிச் சென்றுள்ளார்.
வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தப்பியோடியவர் 23 வயது அல்பேனியர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தப்பிச் செல்லும் போது கைவிலங்கும் போடப்பட்டிருந்தார்.
பல பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் உடனடியாகத் தேடுதல் வேட்டை நடத்திய போதிலும், கைதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மூலம்- bluewin